நாள் | நேரம் |
22-05-2024 புதன்கிழமை | இரவு 7:00 மணிக்கு |
23-5-2024 வியாழக்கிழமை | இரவு 7:00 மணிக்கு |
24-5-2024 வெள்ளிக்கிழமை | இரவு 7:00 மணிக்கு |
Aroor Boat Festival – ஆரூர் தெப்ப திருவிழா 2024 – திருவாரூர் தெப்பத்திருவிழா 2024 : வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தெப்பத்திருவிழாவானது வருகின்ற குரோதி வருடம் வைகாசி மாதம் ஒன்பதாம் தேதி 22-5-2024 புதன்கிழமை சதுர்த்தி திதி சுவாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7:00 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் அருள்மிகு பார்வதி அம்பாள் உடனுறை அருள்மிகு கல்யாண சுந்தரர் தெப்பத் திருநாள் மண்டபத்திற்கு எழுந்தருளி அன்று இரவு கமலாலய திருக்குளத்தில் 23-5-2024 வியாழக்கிழமை மற்றும் 24-5-2024 வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு மேல் நாள்தோறும் மூன்று முறை தெப்ப உலா நடைபெற உள்ளதால், தற்போது திருவாரூரில், விழா ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கி உள்ளது.
திருவாரூர் தெப்பம் 2024 | thiruvarur theppam 2024
தமிழகத்திலேயே மிகப்பெரிய தெப்பம் இந்தத் திருவாரூர் தியாகராஜர் தெப்பம்தான். தமிழகத்தில் எந்த ஒரு தெப்பத்திலும், மக்களை ஏற்றும் நடைமுறை கிடையாது. ஆனால், திருவாரூர் தெப்பத்தில் மட்டும்தான் மக்களை ஏற்றும் நடைமுறை உள்ளது. அந்த அளவிற்கு பரப்பளவில் மிக பெரியதாக இருக்கும் இந்தத் தெப்பம். தெப்பத் திருவிழாவின் போது சுமார் 500 பேர் வரை தெப்பத்தின் மீது அமர்ந்து பயணிப்பார்கள். இந்தத் தெப்பத்தினை கட்டும் பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுப்பட்டுள்ளனர். 432 தகர பேரல்களை இரண்டு அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 16 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைக்கப்பட்டுள்ளது.
தியாகராஜர், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், விநாயகர், முருகன் ஆகிய கடவுள்களின் திருவுருவங்களுடன் தெப்பத்தின் மண்டபமானது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தெப்பத்தில் ‘பார்வதி கல்யாணசுந்தரர்’ எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தெப்பத்திருவிழாவானது வருகின்ற மே மாதம் 20-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை, தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற உள்ளதால் தற்போது திருவாரூரில், விழா ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கி உள்ளது.
தியாகராஜர் கோயிலின் எதிரே உள்ள கமலாலயம் என்னும் திருப்பெயர் கொண்ட குளத்தில், இந்த தெப்பத் திருவிழாவானது நடைபெறும். குளமே ஆலயமாகப் போற்றப்படும் இந்த கமலாலய குளமானது, மகாலட்சுமி தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது.
thiruvarur Latest updates
திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் ஓட 2024 ஆம் ஆண்டிற்கான தெப்பத் திருவிழா பற்றின தகவல்களை நம்ம தொடர்ந்து பார்க்கலாம். திருக்கோயிலின் புனித தீர்த்தம் ஆகிய கமலாலயம் எனும் இச்சிறப்பு மிகுந்த திருக்குளம், தொன்மைக்காலம் முதல் புராண வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாகும். இத்திருக்குளத்தில் புனித கட்டங்களாக 64 கட்டங்கள் உள்ளன. இதில் பங்குனி உத்திரம் தீர்த்த விழா நடைபெறும், மற்றும் மார்கழி திருவாதிரை அருணோதயம் மகோதயம் முதலான புண்ணிய காலங்களிலும் தீர்த்த விழா நடைபெறும். இதில் ஆண்டுதோறும் இன்னிசை நிகழ்ச்சியோடு நடைபெறும் தெப்பத் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குரோதி வருடம் வைகாசி மாதம் ஒன்பதாம் தேதி 22.5 2024 புதன்கிழமை சதுர்த்தி திதி சுவாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7:00 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் அருள்மிகு பார்வதி அம்பாள் உடனுறை அருள்மிகு கல்யாண சுந்தரர் தெப்பத் திருநாள் மண்டபத்திற்கு எழுந்தருளி, அன்று இரவு கமலாலய திருக்குளத்தில் வியாழக்கிழமை மற்றும் 24/5 2024 வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு மேல் நாள்தோறும் மூன்று முறை தெப்ப உலா நடைபெற உள்ளது. தெப்பத் திருவிழாவில் நாமும் கலந்து கொண்டு இறைவனது அருளைப் பெறுவோம். இப்பதிவினை இது முழுமையாக கேட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.