சிறப்பாக செயல்பட்டு வரும் நமது திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ அவர்கள், இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளியிட்டு உள்ளார். மாவட்ட சமூகநலத் துறையின் சார்பாக இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்களது வயது வரம்பு, 20 முதல் 40 இருக்கும் மகளிராக இருக்க வேண்டும் மற்றும் அவர்களுது ஆண்டு வருமானம் ரூ.72000 க்குள் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் உரிய கல்வி சான்றுகளுடன், வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
பெண்கள் திறன் மற்றும் அறிவு பெறுவதினால் அவர்கள் அதிகாரம் அடைவதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதிசெய்து அவர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய இயலும். பொருளாதார சுதந்திரத்தின் மூலம் மட்டுமே பெண்கள் அதிகாரம் பெற முடியும். ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, அவள் தன்னை அதிகாரம் பெற்றவளாக கருத இயலும். இதை மனதில் கொண்டு சமூக நலத்துறை இயக்குநரகம் மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சமூக-பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கூட்டு நடவடிக்கையின் மூலம் கூட்டுறவு என்ற கருத்து இந்த கூட்டுறவு சங்கங்களின் பெண் உறுப்பினர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது. இந்த தொழில் கூட்டுறவு சங்கங்களில், சமுதாயத்தில் பின்தங்கிய 18-40 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே. உறுப்பினர்களாக முடியும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்கள் இந்தச் சங்கங்களில் உறுப்பினர்களாகப்பட்டு, அவர்களுக்குத் நீடித்த வருமானத்தைப் ‘ அளிக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
சமூக நல இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 99 மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்களும் 1 திருநங்கை தையற்கூட்டுறவு சங்கமும் செயல்பட்டு வருகின்றன. மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள், புரட்சி தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிக் குழந்தைகளுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் / பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் மற்றம், சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கும் சீருடைகள் தைத்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் வழங்கும் திட்டம்:
கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சுய வேலைப்வாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.