பாத தரிசனம்:25/03/2024 – திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்.

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில், 25/03/2024 இன்று, பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா

பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று. விழாவின் பயனாக பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா.

சூரியன் உதிக்கும் மங்கலமான காலைப்பொழுதில் கோடி சூரியர்களின் ஒளியையும் விஞ்சும் தியாகராஜப்பெருமான் தம் வலது திருவடியையும், உலகு அன்னையான கொண்டியம்மை தம் இடது திருவடியையும் காட்சிதர, சிவசக்தி ஐக்கிய வடிவமான முருகப்பெருமான் இருவருக்கும் நடுவே எழுந்தருளியிருக்கும் நிலையில், திருவிளமலில் இருந்து எழுந்தருளிய பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.

ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய இந்த தரிசனம் சொல்லி முடிக்க முடியாத புண்ணியங்களை வழங்கி நம்மை வாழ்வில் மேம்படுத்தும் தன்மையுடையது.

இரவு 7.00 மணிக்குமேல் அருள்மிகு தியாகராஜ சுவாமி தேவாசிரியன் மண்டபத்தில் எழுந்தருளுதல்

அருள்மிகு தியாகராஜ சுவாமி தட்டஞ்சுற்றி மண்டபத்தில் கிருஷ்ணகந்த திருஅந்திக்காப்பு (சாயரட்சை) நடைபெற்று பின்னர் தேவாசிரியன் எனும் திருமண்டபத்தில் எழுந்தருளுதல்.

Leave a Comment