தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர் ரயில் சந்திப்பு , அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் சந்திப்பை அம்ரித் பாரத் திட்டத்தின் வாயிலாக மேம்படுத்த ரூபாய் எட்டு கோடியை 36 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் ரயில் சந்திப்பின் கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன படுத்தப்பட உள்ளது பயன்களை ஈர்க்கும் விதமாக, ரயில் சந்திப்பின் முகத்தில் அலங்கார வளைவும் விசாலமாக உள்ளே வருவதற்கு வெளி செல்வதற்கு மான இரண்டு நுழைவாயில்கள்.
திருவாரூர் என்றாலே தேரை நினைவுபடுத்தும் வண்ணம், முகப்பில் உருவம் அமைய உள்ளது. மேலும் வாகனங்களை தாராளமாக நிறுத்த, வாகன காப்பகம்.
இடையூறு இன்றி பாதசாரிகள் நடந்து செல்லும் பாதை, அனைத்து நடைமுறைகளிலும் கூடுதலான இருக்கைகள், குடிநீர் குழாய்கள், பாதுகாப்பான மேற்கூரைகள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் போன்றவை பயணிப்போரை கவரக்கூடிய விதத்தில் அமைய உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றவர்களுக்கு ஏதுவாக சாய்வு தளம் பாதையும் அமைக்கப்பட உள்ளது.
இதைத்தவிர பார்வையற்றோர் நடந்து செல்ல ஏதுவாக தொடு உணர்வு தரைத்தளம் அமைய உள்ளது. இந்த பணிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில் விரைவில் திருவாரூர் ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசாங்கத்தினுடைய ஆலோசனையின் வண்ணம், ஒவ்வொரு ரயில் சந்திப்பும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு பெயர் “அம்ரித் பாரத்”.
“அம்ரித் பாரத்” திட்டத்தின் வழிகளாக திருவாரூர் ரயில் சந்திப்பும் மேம்படுத்தப்பட உள்ளது திருச்சி கோட்ட அதிகாரிகள் உடைய செய்தி குறிப்பின்படி ஏறக்குறைய 8 கோடியே 36 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது . இந்த டெண்டர் வாயிலாக, திருவாரூர் உடைய ரயில் சந்திப்பு, மிகப்பெரிய அளவிற்கு பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும், பயணிப்பதற்கு போதுமான வசதிகளை தருவதாகவும் அமையும், என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த “அம்ரித் பாரத்” திட்டத்தின் வாயிலாக திருவாரூரில், இரண்டு விதமான நுழைவாயில்கள் அமைக்கப்பட உள்ளன. ஒன்று உள்ளே வருவதற்கும், ஒன்று வெளியே செல்வதற்கு. அதேபோல பயணிகளுக்கு தேவையான காப்பான குடிநீர், அதிக அளவிலான இருக்கைகள், மேற்கூரைகள், பார்வையற்றவர்கள் இந்த செல்ல ஏதுவாக பேட்டில் ஃப்ளோரிங் என்ற பலவிதமான வசதிகளும் செய்து தரப்பட உள்ளது.
“அம்ரித் பாரத்” திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு ரயில் சந்திப்பும் மேம்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திருவாரூர் என்றாலே தான் நினைவுக்கு வரும் அந்த தேர் திருவாரூர் சந்திப்பின் உடைய முகப்பில் சிறிய அளவில் அமைக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்படி இருக்க போகிறது தெரியுமா? திருவாரூர், திருச்சி, அம்ரித் பாரத் திட்டம், ரயில் நிலையம் மேம்பாடு, திருவாரூர் ரயில் நிலையம், தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர் ரயில் சந்திப்பு ‘அமரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் சந்திப்பில் நடைபெற்று வருகிறது.