தலைநகரமாக மாறியது முத்துப்பேட்டை தாலுக்கா

முத்துப்பேட்டை தாலுக்கா தலைநகரமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முத்துப்பேட்டையில் இருந்து மன்னார்குடி வரை உள்ள தொலைவு 35 கிலோமீட்டர் அதில் சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்து கிராமங்களும் ஊர்களும் முத்துப்பேட்டை தாலுகாவின் கீழ் இணைக்கப்பட்டுவிட்டது…

முத்துப்பேட்டை (MTT) மன்னார்குடி (MQ) ரயில் பாதை நிறைவேறினால் மன்னை சாலையில் உள்ள பெரும்பாலான மக்கள் முத்துப்பேட்டை தாலுக்கா தலைநகருக்கு ரயில் போக்குவரத்து மூலம் அரசு அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து கொள்வதற்கு வந்து செல்லவும் , வணிகம் வர்த்தகம் ரீதியாக வந்து செல்வதற்கும் , இங்கு உள்ள சுற்றுலா பகுதியான முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகளை பார்வையிட வருவதற்கும் பயன்படும்.

மேலும் முத்துப்பேட்டையில் தான் சுற்றுவட்டாரங்களில் உள்ள 5 மாவட்டங்களுக்கு ( துல்லியமாக எத்தனை மாவட்டங்கள் என்று தெரியவில்லை ஆனால் இதற்கு முன் இந்த சேமிப்பு கிடங்கு ரயில் நிலையத்திற்கு அருகிலேயே இருந்தது என்று நினைவிருக்கிறது. ) நெல் கோதுமை உணவு சம்பந்தப்பட்ட தானியங்கள் சேமிக்கும் கிடங்கும் அமைந்துள்ளது. மன்னார்குடி (MQ) முத்துப்பேட்டை (MTT) ரயில் பாதை நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அந்த நெல் தானிய கிடங்கையும் இலகுவாக இணைக்க முடியும் அங்கிருந்து அவர்களின் விவசாயம் தானியங்கள் சார்ந்த பொருட்களை சிரமமின்றி ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

1 thought on “தலைநகரமாக மாறியது முத்துப்பேட்டை தாலுக்கா”

Leave a Comment