திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம்

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம் கோலாகலமாக ஏற்பாடு – 18/12/2023 நடைபெற உள்ளது

தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும்,எளிதாகவும் சென்று சேர்நதிட வழிவகுக்கும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 18-12-2023 அன்று
கோயம்புத்துரில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

திருவாருரில் மக்களுடன் முதல்வர்  புதிய திட்டம் கோலாகலம். படம் : சாந்தி மண்டபம் ,கீழ வீதி ,திருவாரூர் .
திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம் கோலாகலம். படம் : சாந்தி மண்டபம் ,கீழ வீதி ,திருவாரூர் .

அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர் நகராட்சி, வார்டு எண்: 18,19,20,21,22க்குட்பட்டவர்களுக்கு கீழவீதி சாந்தி திருமண மண்டபத்திலும்,மன்னார்குடி நகராட்சி, வார்டு எண்:1,2,3,13,14,15க்குட்பட்டவர்களுக்கு கேஜி திருமண மண்டபத்திலும், திருத்துறைப்பூண்டி நகராட்சி, வார்டு எண்:1,2,3,4,16க்குட்பட்டவர்களுக்கு அங்கை மஹால் திருமண மண்டபத்திலும், கூத்தாநல்லூர் நகராட்சி, வார்டு எண்:3,4,5,6,7,8க்குட்பட்டவர்களுக்கு செல்வி மஹால் திருமண மண்டபத்திலும், நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் ராஜா ராணி திருமண மண்டபத்திலும், குடவாசல் பேரூராட்சிக்குட்பட்பட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் திருக்குளம் தென்கரை மலர் மஹால் திருமண மண்டபத்திலும் பொதுமக்களிடமிருந்து மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 18.12.2023 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 வரை மனுக்கள் பெறும் முகாம் நடைபெறவுள்ளது.

திருவாருரில் மக்களுடன் முதல்வர்  புதிய திட்டம் கோலாகலம். படம் : சாந்தி மண்டபம் ,கீழ வீதி ,திருவாரூர் .
திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம் கோலாகலம். படம் : சாந்தி மண்டபம் ,கீழ வீதி ,திருவாரூர்
நடைபெறும் நாள் நடைபெறும் இடம் வார்டு எண்
118.12.2023 திங்கட்கிழமைகீழவீதி, சாந்தி திருமண மண்டபம்,திருவாரூர் 18,19,20,21,22
219.12.2023 செவ்வாய் கிழமைகீழவீதி, சாந்தி திருமண மண்டபம்,திருவாரூர் 4,5,6,11,12,13
321.12.2023 வியாழன் கிழமை இராசம்மாள் திருமண மண்டபம் ,கமலாலயம் ,தென்கரை , திருவாரூர் 8,9,14,16,17,
427.12.2023 புதன் கிழமைமல்லிகா மஹால் , நாகை பைபாஸ் சாலை ,திருவாரூர் 23,27,28,30
503.01.2024 புதன் கிழமைலட்சிமி மஹால் ,கமலாலயம் ,வடகரை , திருவாரூர் 1,2,3,7,10
திருவாருரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம் – அட்டவணை

இம்முகாமில், மின்சார வாரியம்,நகராட்சி நிர்வாகம்,வருவாய் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற துறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment