திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில், 13/01/2025 இன்று, பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா.
மார்கழி விழாவின் நிறைவு நாளான இன்று. விழாவின் பயனாக பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா.
சூரியன் உதிக்கும் மங்கலமான காலைப்பொழுதில் கோடி சூரியர்களின் ஒளியையும் விஞ்சும் தியாகராஜப்பெருமான் தம் வலது திருவடியையும், உலகு அன்னையான கொண்டியம்மை தம் இடது திருவடியையும் காட்சிதர, சிவசக்தி ஐக்கிய வடிவமான முருகப்பெருமான் இருவருக்கும் நடுவே எழுந்தருளியிருக்கும் நிலையில், திருவிளமலில் இருந்து எழுந்தருளிய பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.
பொதுமக்கள் இன்று காலை 6 மணி அளவில் இருந்து ஸ்ரீ தியாகராஜ பெருமானின் திருவடி வணங்க காத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.