மாவட்ட ஆட்சியர் இனி இவர்தான் திருவாரூருக்கு…

இன்று (31.01.2025) ஒன்பது  மாவட்டங்களில் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதன் மூலம் புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர், திண்டுக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர் போன்ற ஒன்பது மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

thiruvarur-new-collector-2025

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  திருவாரூர் மாவட்ட ஆட்சியராக   நியமிக்கப்பட்டார் சாரு ஸ்ரீ ஐஏஎஸ் அவர்கள்.திருவாரூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த  சாரு ஸ்ரீ  ஐஏஎஸ்,அவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில்,  அவருக்கு பதிலாக சிவ சவுந்திரவள்ளி ஐஏஎஸ் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திருவாரூர் மாவட்டத்தின் 33வது மாவட்ட ஆட்சியராக சிவ சவுந்தரவல்லி ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment