திருவாரூர் கீழவீதியில் உள்ள பஞ்சின் மெல்லடியாள் சமேத துவாயநாதர் ஆலயத்தில் இன்று ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகமும் மாலையில் காய்கறிகள் மற்றும் அன்னம் சாற்றி மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது
