Thiruvarur-திருவாரூரில் அமைந்துள்ள ஸ்ரீ தியாகேச பெருமான் கோயில் இன்று 21-3-2024 ஆழித் தேரோட்டம் நடத்தப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவாரூர் இது சர்வ பரிகார தோஷங்களை நீக்கும் தளமாக திகழ்கிறது மேலும் இந்த கோவிலில் மார்ச் மாதத்தில் ஆழித்தேரோட்டம் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகிறது.
இங்குள்ள ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே, ஏன் உலகத்திலேயே!, மிகப்பெரிய தேராக கருதப்படுகிறது. இந்த தேரோட்டமானது, அஸ்த நட்சத்திரத்தில் குடியேறி, ஆயில்யம் நட்சத்திரத்தில் நடத்தப்படும் என்பது ஆகம விதியாக விளங்குகின்றது.
மேலும் அதன்படி அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றம் நடைபெற்று முடிந்து விட்டது. அதனைத் தொடர்ந்து ஆயில்ய நட்சத்திரத்தில் இன்று ஆசியாவில் மிகப்பெரிய தேரோட்டமானது துவங்கியது மார்ச் 21 2024 ஆம் ஆண்டு இன்று காலை தேருக்கு உற்சவர் கொண்டுவரப்பட்ட பின் முதலில் விநாயகர் தேர் காலில் புறப்பட்டு சென்றது. அதன் பிறகு, 8:50 க்கு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில், பெரியதேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். மேலும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள், திரண்டு வந்து வடம் பிடித்து தேரை விமர்சையாக இழுத்துச் சென்றனர். இந்த தேரோட்டமானது பகல் முழுவதும் கீழ வீதியில் தொடங்கி , மாலையில் தனது நிலையடிக்கு வந்து சேரும். அதன் படியே இன்று, நிலையடைக்கு வந்து சேர்ந்தது.
இந்த ஆழித்தேரானது நான்கு நிலைகளையும், பூதப்பாா், சிறுஉறுதலம், பொியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டுள்ளது. இந்த தேரின் நான்காவது நிலையில் தான் உற்சவர் தியாகராஜ சுவாமி வீற்றிருக்கிறார். இந்த பீடம் மட்டுமே, 31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது. மேலும் தேருக்கான தேர் சிலைகளை, சுமார் 3000 மீட்டர் உயரம் அளவுக்கு வாங்கப்பட்டு, அதனை அலங்கரித்து கோயில் நிர்வாகித்தனர் தேரில் ஏற்றி அழகு பார்ப்பார்கள். மேலும் இந்த தேரில் பிரம்மா தேரோட்டியாகவும் நான்கு வேதங்களை, முன்னெழுத்தும் வகையில் குதிரைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
பண்டைய காலங்களில், இந்த தேரை இழுப்பதற்கு கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் தேவைப்பட்டனர் என கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆள் பற்றாக்குறையால் மக்கள் வடம் பிடித்து இழக்கும் பொழுது பின்புறத்தில் யானைகளை வைத்து தேரை தள்ளி நகர்த்தி உள்ளனர். ஆனால் இப்பொழுது நவீன தொழில்நுட்ப உதவவியால் பக்தர்கள் வடம்புலித்து இடித்து செல்ல நான்கு புல்டோசர்கள் உதவியுடன் தேரை இழுத்துச் செல்கின்றனர்.
தேரை அலங்கரிப்பதற்கு கிட்டத்தட்ட 500 கிலோ எடையுள்ள துணிகள், 50 டன் எடை கொண்ட கயிறுகள், 5 டன் பனை மரக்கட்டைகள், அலங்காரப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றது.
திருவாரூர் தேரின் முன்புறத்தில் நாலு பெரிய வடம் கயிறுகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பெரிய தேரில் முன்புறத்தில் நான்கு பெரிய வடம் பிடிக்கும் கயிறுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு வடகயிறு 21 அங்குலம் சுற்றளவு, கிட்டத்தட்ட 425 அடி நீளமும் கொண்டதாக இருக்கும்.
இந்தத் தேர் ஓடுவதை காண்பது காட்டிலும் தியாகராஜர் கோவிலின் 4 வீதிகளும் ஆடி ஆடி திரும்புவதை காண்பதற்கே உலகத்தில் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் திரளாக கூடி இங்கு வந்து தியாகேசனை வழிபடுகின்றனர். இந்தத் தேர், அசைந்து அசைந்து ஆடி ஆடி திரும்புவதை காண்பதற்கே மக்கள்கள் திரளாக கூடி இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
மேலும் மாலை எட்டு மணி அளவில் பக்த காட்சிக்கு தியாகேச பெருமாள் அலங்கரிக்கப்பட்டு திரையிடப்படுகிறது. ஆரூரா தியாகேச ! ஆரூரா தியாகேச !