ThiruvarurDirectory

திருவாரூர்‌ கீழவீதி துவாயநாதர்‌ ஆலய அன்னாபிஷேகம்‌

திருவாரூர்‌ கீழவீதியில்‌ உள்ள பஞ்சின்‌ மெல்லடியாள்‌ சமேத துவாயநாதர்‌ ஆலயத்தில்‌ இன்று ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு காலையில்‌ சிறப்பு அபிஷேகமும்‌ மாலையில்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ அன்னம்‌ சாற்றி மகா தீபாரதனை நடைபெற்றது. இதில்‌ நூற்றுக்கணக்கான பக்தர்கள்‌ கலந்து கொண்டு சுவாமி தரிசனம்‌ செய்தனர்‌. பின்‌ அனைவருக்கும்‌ அருட்பிரசாதம்‌ வழங்கப்பட்டது

கீழவீதி கைலாசநாதர்‌ கோவிலில்‌ அன்னாபிஷேகம்‌!

திருவாரூர்‌ கீழவீதியில்‌ உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க வள்ளி தாயார்‌ உடனுறை கைலாசநாதர்‌ திருக்கோவிலில்‌ ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு இன்று 15 / 11/ 2024 வெள்ளிக்கிழமை பிற்பகல்‌ 1 மணி முதல்‌ 3 மணி வரை காய்கறிகளால்‌ அலங்கரிக்கப்பட்டு அன்னாபிஷேகம்‌, தீபாராதனை நடைபெற்றது. இதில்‌ பெருந்திரளான பக்தர்கள்‌ ஆன்மீக பெருமக்கள்‌ கலந்து கொண்டு சுவாமி தரிசனம்‌ செய்தனர்‌. பின்‌ அன்னப்பிரசாதம்‌ வழங்கப்பட்டது. 

திருவாரூர்‌ மற்றும்‌ சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில்‌ மின்தடை அறிவிப்பு!

திருவாரூர்‌ துணைமின்‌ நிலையத்தில்‌ மாதாந்திர பணிகள்‌ வரும்‌ நவ.16 (சனி) அன்று நடைபெற உள்ளது. இதனால்‌ திருவாரூர்‌, கூடூர்‌, அலிவலம்‌, ஓடாச்சேரி, சேந்தமங்கலம்‌, விஜயபுரம்‌, வாலவாய்க்கால்‌, மாங்குடி, கூடூர்‌, திருக்கணமங்கை, பெரும்பண்ணையூர்‌, விளமல்‌, ஈஃபி.காலனி, தென்றல்‌ நகர்‌, மாங்குடி, பவித்திரமாணிக்கம்‌, அடியக்கமங்கலம்‌ மற்றும்‌ சுற்றுவட்டார பகுதிகளில்‌ காலை 9 முதல்‌ மதியம்‌ 2 மணி வரை மின்விநியோகம்‌ இருக்காது.

திருவாரூர்‌: ஊட்டச்சத்து உறுதி செய்‌ திட்டம்‌

திருவாரூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌ மாங்குடி ஊராட்சியில்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்‌ 15.11.2024 இன்று ஊட்டச்சத்தை உறுதி செய்‌ திட்டம்‌ தொடக்க விழாவில்‌ தாய்மார்கள்‌, கர்ப்பிணி பெண்கள்‌ என 15 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை திருவாரூர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ வழங்கினார்‌. திருவாரூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ பூண்டி கே.கலைவாணன்‌ அவர்கள்‌ உடன்‌ இருந்தார்‌.

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க விண்ணப்பிக்கலாம்‌

பெற்றோரை இழந்த குழந்தைகள்‌, கைவிடப்பட்ட குழந்தைகளை மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலக மூலம்‌ கண்டறிந்து, குடும்ப சூழ்நிலைகு ஏற்றவாறு பராமரிப்பு திட்டத்தின்‌ மூலம்‌ தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என திருவாரூர்‌ ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌. இதற்குமாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, அறை எண்‌ 310, 3வது தளம்‌, திருவாரூர்‌ என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்‌.