நன்னிலம் அருகே கோவில் திருமாளம் கிராமத்தில் மகாகாலநாதர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி விழா நடைபெற்றது. முன்னதாக உலக மக்களின் நன்மைக்காக திறப்பு யாகம் நடைபெற்றது. மகாகாலநாதர், பயசாம்பிகை ராஜ மாதங்கி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை கண்டிக்கப்பட்டது. பின்னர் 15 அடி நீளத்திற்கு 50 லிட்டர் நெய் ஊற்றி நெய்குல தரிசனம் நடைபெற்றது.


