இன்று திருவாரூர் தியாகரே தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் பாத அபிஷேகம்!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில், 13/01/2025 இன்று, பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா.  மார்கழி விழாவின் நிறைவு நாளான இன்று. விழாவின் பயனாக பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா. சூரியன் உதிக்கும் மங்கலமான காலைப்பொழுதில் கோடி சூரியர்களின் ஒளியையும் விஞ்சும் தியாகராஜப்பெருமான் தம் வலது திருவடியையும், உலகு அன்னையான கொண்டியம்மை தம் இடது திருவடியையும் காட்சிதர, சிவசக்தி ஐக்கிய வடிவமான முருகப்பெருமான் இருவருக்கும் நடுவே எழுந்தருளியிருக்கும் நிலையில், திருவிளமலில் … Read more

1500 ஆண்டுகள் பழமையான மகாகாலநாதர் கோவிலில் நெய்குல தரிசனம்

1500-old-temple-in-thiruvarur

நன்னிலம் அருகே கோவில் திருமாளம் கிராமத்தில் மகாகாலநாதர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி விழா நடைபெற்றது. முன்னதாக உலக மக்களின் நன்மைக்காக திறப்பு யாகம் நடைபெற்றது. மகாகாலநாதர், பயசாம்பிகை ராஜ மாதங்கி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை கண்டிக்கப்பட்டது. பின்னர் 15 அடி நீளத்திற்கு 50 லிட்டர் நெய் ஊற்றி நெய்குல தரிசனம் நடைபெற்றது.

திருவாரூர்‌ கீழவீதி துவாயநாதர்‌ ஆலய அன்னாபிஷேகம்‌

thiruvarur anna abisegam

திருவாரூர்‌ கீழவீதியில்‌ உள்ள பஞ்சின்‌ மெல்லடியாள்‌ சமேத துவாயநாதர்‌ ஆலயத்தில்‌ இன்று ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு காலையில்‌ சிறப்பு அபிஷேகமும்‌ மாலையில்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ அன்னம்‌ சாற்றி மகா தீபாரதனை நடைபெற்றது. இதில்‌ நூற்றுக்கணக்கான பக்தர்கள்‌ கலந்து கொண்டு சுவாமி தரிசனம்‌ செய்தனர்‌. பின்‌ அனைவருக்கும்‌ அருட்பிரசாதம்‌ வழங்கப்பட்டது

கீழவீதி கைலாசநாதர்‌ கோவிலில்‌ அன்னாபிஷேகம்‌!

kailasa nathar temple anna abisegam in thiruvarur

திருவாரூர்‌ கீழவீதியில்‌ உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க வள்ளி தாயார்‌ உடனுறை கைலாசநாதர்‌ திருக்கோவிலில்‌ ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு இன்று 15 / 11/ 2024 வெள்ளிக்கிழமை பிற்பகல்‌ 1 மணி முதல்‌ 3 மணி வரை காய்கறிகளால்‌ அலங்கரிக்கப்பட்டு அன்னாபிஷேகம்‌, தீபாராதனை நடைபெற்றது. இதில்‌ பெருந்திரளான பக்தர்கள்‌ ஆன்மீக பெருமக்கள்‌ கலந்து கொண்டு சுவாமி தரிசனம்‌ செய்தனர்‌. பின்‌ அன்னப்பிரசாதம்‌ வழங்கப்பட்டது. 

திருவாரூர்‌ மற்றும்‌ சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில்‌ மின்தடை அறிவிப்பு!

power shutdown i thiruvarur 16-nov-2024

திருவாரூர்‌ துணைமின்‌ நிலையத்தில்‌ மாதாந்திர பணிகள்‌ வரும்‌ நவ.16 (சனி) அன்று நடைபெற உள்ளது. இதனால்‌ திருவாரூர்‌, கூடூர்‌, அலிவலம்‌, ஓடாச்சேரி, சேந்தமங்கலம்‌, விஜயபுரம்‌, வாலவாய்க்கால்‌, மாங்குடி, கூடூர்‌, திருக்கணமங்கை, பெரும்பண்ணையூர்‌, விளமல்‌, ஈஃபி.காலனி, தென்றல்‌ நகர்‌, மாங்குடி, பவித்திரமாணிக்கம்‌, அடியக்கமங்கலம்‌ மற்றும்‌ சுற்றுவட்டார பகுதிகளில்‌ காலை 9 முதல்‌ மதியம்‌ 2 மணி வரை மின்விநியோகம்‌ இருக்காது.

திருவாரூர்‌: ஊட்டச்சத்து உறுதி செய்‌ திட்டம்‌

thiruvarur collector name : T.CHARUSREE I.A.S.,

திருவாரூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌ மாங்குடி ஊராட்சியில்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்‌ 15.11.2024 இன்று ஊட்டச்சத்தை உறுதி செய்‌ திட்டம்‌ தொடக்க விழாவில்‌ தாய்மார்கள்‌, கர்ப்பிணி பெண்கள்‌ என 15 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை திருவாரூர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ வழங்கினார்‌. திருவாரூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ பூண்டி கே.கலைவாணன்‌ அவர்கள்‌ உடன்‌ இருந்தார்‌.

திருவாரூரில்‌ பலத்த மழை

thiruvarur rain today 16-11-2-24

திருவாரூர்‌ நகரம்‌ மற்றும்‌ அதன்‌ சுற்றுவட்டார பகுதிகளான பழைய பேருந்து நிலையம்‌, புதிய பேருந்து நிலையம்‌, விஜயபுரம்‌, நேதாஜி சாலை, பேபி டாக்கீஸ்‌ ரோடு, விஆர்‌எம்‌ ரோடு, வாழ வாய்க்கால்‌, விளமல்‌. பனகல்‌ சாலை, மடப்புரம்‌ வடக்கு வீதி, தெற்கு வீதி, கொடிக்கால்‌ பாளையம்‌, ஈபி காலனி, கிடாரம்‌, கொண்டான்‌ உள்ளிட்ட பகுதிகளில்‌ கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க விண்ணப்பிக்கலாம்‌

thiruvarur collector name : T.CHARUSREE I.A.S.,

பெற்றோரை இழந்த குழந்தைகள்‌, கைவிடப்பட்ட குழந்தைகளை மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலக மூலம்‌ கண்டறிந்து, குடும்ப சூழ்நிலைகு ஏற்றவாறு பராமரிப்பு திட்டத்தின்‌ மூலம்‌ தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என திருவாரூர்‌ ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌. இதற்குமாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, அறை எண்‌ 310, 3வது தளம்‌, திருவாரூர்‌ என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்‌.

இலவச தையல் இயந்திரம் – திருவாரூர் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்!

free-apply-of-sewing-machine-scheme-tn-govenment

சிறப்பாக செயல்பட்டு வரும் நமது திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ அவர்கள், இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளியிட்டு உள்ளார். மாவட்ட சமூகநலத் துறையின் சார்பாக இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்களது வயது வரம்பு, 20 முதல் 40 இருக்கும் மகளிராக இருக்க வேண்டும் மற்றும் அவர்களுது ஆண்டு வருமானம் ரூ.72000 க்குள் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் உரிய கல்வி சான்றுகளுடன், வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் … Read more

Aroor Boat Festival | ஆரூர் தெப்ப திருவிழா 2024

thiruvarur theppam 2024

நாள் நேரம் 22-05-2024 புதன்கிழமை இரவு 7:00 மணிக்கு 23-5-2024 வியாழக்கிழமை இரவு 7:00 மணிக்கு 24-5-2024 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு திருவாரூர் தெப்பத்திருவிழா 2024 Aroor Boat Festival – ஆரூர் தெப்ப திருவிழா 2024 – திருவாரூர் தெப்பத்திருவிழா 2024 : வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தெப்பத்திருவிழாவானது வருகின்ற குரோதி வருடம் வைகாசி மாதம் ஒன்பதாம் தேதி 22-5-2024 புதன்கிழமை சதுர்த்தி திதி சுவாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7:00 … Read more